முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தால் ஜெயலில் இருப்பார்: நாராயணசாமி
முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை இயக்குனராக செவ்வேல் நியமிக்கப்பட்டது விதிமுறைகளின் படி ஆளுநர் செய்திருக்கிறார், இது சரியானது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கசாமி போர் கொடி தூக்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
சுகாதாரத்துறை இயக்குனர் பதவியை நிரப்புவதற்கு ரூ.50 லட்சம் வரை முதல்வர் அலுவலக ஊழியர்களால் பேரம் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் விளக்கம் அளிக்காமல் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று துணைநிலை ஆளுநரை மிரட்டும் வகையில் ரங்கசாமி இறங்கினார். ஆனால் அது பிசுபிசுத்து போய்விட்டது.
முதல்வர் அனுப்பிய கோப்பிற்கு துனைநிலை ஆளுநர் உண்மையிலேயே அனுமதி மறுத்துவிட்டார் என்றால் ரங்கசாமி ஏன் தனது பதிவை ராஜினாமா செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, ஒரு நிமிடம் கூட முதல்வர் பதவியை ரங்கசாமி எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார், பதவி நாற்காலிக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார்.
இவருடைய மிரட்டல் எல்லாம் துனை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனிடம் செல்லாது என்றும், ராஜிநாமா செய்யப் போவதாக கூறிய ரங்கசாமி இப்போது துணைநிலை ஆளுநரிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்று கூறினார். மேலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானம் பிறக்கும் என்ற நாராயணசாமி, புதுச்சேரி தேசிய ஜனநாக கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிதான் மாப்பிள்ளை, ஆனால் போடுகின்ற சட்ட பாஜகவினுருடையது.
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார். அவரை பாஜக சிறையில் தள்ளும். அவர் மீது 7 ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஜெயிக்கமாட்டார்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார்.