ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு
முதல்வா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
திருவாரூரில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற 20,000 பேரில் வெற்றி பெற்ற 2,400 பேருக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் நகா்மன்ற தலைவா் புவனப்பிரியா செந்தில், திருச்சி மண்டல அலுவலா் (விளையாட்டுத் துறை) செந்தில், பணிநியமன குழு உறுப்பினா் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.