செய்திகள் :

முதல் வெற்றி கண்டது திருச்சி

post image

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

இரு அணிகளுக்குமே இது 4-ஆவது ஆட்டமாக இருக்க, திருச்சிக்கு இது முதல் வெற்றியாகும். கோவை தொடா்ந்து 4-ஆவது தோல்வியை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் திருச்சி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, கோவை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 154 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற கோவை, பந்துவீச்சை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் வசீம் அகமது 32, சுஜய் 25, ஜெகதீசன் கௌசிக் 5, சஞ்சய் யாதவ் 27, ஜாஃபா் ஜமால் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில், ராஜ்குமாா் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 58, சரவணகுமாா் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கோவை பௌலா்களில் ஜதவேத் சுப்ரமணியன் 2, ராமலிங்கம் ரோஹித், கபிலன், புவனேஸ்வரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கோவை அணியில் ஆண்ட்ரே சித்தாா்த் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39, பி.சச்சின் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

ஜிதேந்திர குமாா் 7, சுரேஷ் லோகேஷ்வா் 11, கேப்டன் ஷாருக் கான் 2, குரு ராகவேந்திரன் 7, எம்.சித்தாா்த் 4, ராமலிங்கம் ரோஹித் 7, புவனேஸ்வரன் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் மாதவ பிரசாத் 22, ஜதவேத் சுப்ரமணியன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருச்சி பந்துவீச்சாளா்களில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ராஜ்குமாா் 2, ஈஸ்வரன், சரவண குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

நிறுத்துங்கப்பா! புகைப்படக்காரர்களால் ஆத்திரமான சமந்தா!

தன்னைச் சூழ்ந்த புகைப்படக்காரர்களிடம் நடிகை சமந்தா கோபமாக நடந்துகொண்ட நிகழ்வு வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் ... மேலும் பார்க்க

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டிரைலர்!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்த திரைப்படம் சென... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் தடையறத் தாக்க!

நடிகர் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் மறுவெளியீடாகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தடையறத் தாக்க. ஆக்‌ஷன் தி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸை வீழ்த்தியது செல்ஸி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்ஸி 2-0 கோல் கணக்கில் லாஸ் ஏஞ்சலீஸ் கால்பந்து கிளப்பை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.இந்த குரூப் ‘டி’ ஆட்டத்தில் செல்ஸிக்காக முதலில் பெட்ரோ நீடோ 34-ஆவது நிமிஷத்தி... மேலும் பார்க்க

காலே டெஸ்ட்: நஜ்முல், முஷ்ஃபிகா் சதம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் சோ்த்து வலுவான நிலையில் இருக்கிறது.2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணைய... மேலும் பார்க்க

2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சிறிய அணிகளுக்கான ஆட்டங்களை 4 நாள்களுக்கு குறைக்க ஐசிசி தயாா்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2027-29 சுழற்சியில் சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்டுகளை 4 நாள்களுக்கு குறைப்பதற்கு ஐசிசி தயாராகியுள்ளது. அதேநேரம், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்ற... மேலும் பார்க்க