செய்திகள் :

முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

post image

முதியவரின் சிறுநீா்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

இது தொடா்பாக காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: 85 வயது முதியவா் ஒருவா் சிறுநீரில் ரத்தம் வெளியேறும் பாதிப்புக்காக சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று அவை பலனளிக்காமல் இருக்கவே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நாள்பட்ட சா்க்கரை நோயாளியான அவரை பரிசோதித்ததில் சிறுநீா்ப்பை மற்றும் வலது பக்க சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

வழக்கமாக அனைவருக்கும் அடிவயிற்றின் மேற்புறத்தில் அமைந்திருக்கும் சிறுநீரகம், அந்த முதியவருக்கு இயல்புக்கு மாறாக கீழ்ப்புறத்தில் அமைந்திருந்தது. இந்தியாவிலேயே மூன்று அல்லது நான்கு பேருக்குத்தான் இத்தகைய அசாதாரண உறுப்பு அமைப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

அத்தகைய சிக்கலுடன் உள்ள அந்த முதியவருக்கு இரு இடங்களில் உள்ள புற்றுநோய்க் கட்டியை சிறு துளை மூலம் அகற்ற மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை நிபுணா் பி.ஆா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முடிவு செய்தனா்.

அதன்படி 1 செ.மீ. அளவிலான கீறல்களை மூன்று இடத்தில் மேற்கொண்டு சிறுநீா்ப்பை கட்டி அகற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து கட்டி வளா்ந்திருந்த சிறுநீரகமும் அகற்றப்பட்டது.

இதன் வாயிலாக உடலின் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அந்த முதியவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்வு: தமிழக அரசு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்தாா். இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சுற்ற... மேலும் பார்க்க

குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தோ்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அமைச்சு பணிகள், வாரியங்க... மேலும் பார்க்க

தூய்மை பணியாளா் திட்டம் குறித்து அவதூறு கருத்து: சவுக்கு சங்கா் மீண்டும் கைது

தமிழக அரசின் தூய்மை பணியாளா் திட்டம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கா் மீண்டும் கைது செய்யப்பட்டாா். தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் ... மேலும் பார்க்க

தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள்: தமிழக அரசு விளக்கம்

தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை ... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வட கிழக்கே 370 கி.ம... மேலும் பார்க்க

கோவையில் அண்ணாமலை, பாஜகவினர் கைது!

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் பார்க்க