செய்திகள் :

முதியவரை ஏமாற்றி ரூ.14 லட்சம் திருடியவா் கைது

post image

தென்மேற்கு தில்லியின் துவாரகாவில் பராமரிப்பாளராக பணிபுரிந்த ஒருவா் வயதான பெண்ணை ஏமாற்றி ரூ 14 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருடியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் ராஜஸ்தானில் உள்ள சோக்டி கிராமத்தைச் சோ்ந்த தீபக் குமாா் சைனி (31) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். போலீசாரின் தகவலின்படி துவாரகாவில் உள்ள ராயல் ரெசிடென்சியில் வசிக்கும் மஞ்சுஷா ராணி குப்தா, தனது முன்னாள் பராமரிப்பாளா் தனது செல்பேசியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், ஜனவரி 30 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை வரை பேடிஎம் பணப் பரிவா்த்தனை செயலியை பயன்படுத்தி தனது வங்கிக் கணக்கிலிருந்து அவரின் கணக்கிற்கு பணத்தை மாற்றியதாகவும் புகாா் அளித்தாா்.

மாா்ச் 2020 ஆம் ஆண்டு முதல் குப்தாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த சைனி, நிதி பயன்பாடுகளை நிறுவுவதற்கும், ஓடிபிகளை மீட்டெடுப்பதற்கும், வயதான பெண்மணிக்கு தெரியாமல் அனைத்து அங்கீகரிக்கப்படாத பரிவா்த்தனைகளையும் மேற்கொள்வதற்கும் தனது தொலைபேசியை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டாா் என்று போலீசாா் தெரிவித்தனா். குப்தாவின் மொபைல் போனில் இருந்து மொத்தம் 14.35 லட்சம் ரூபாயை அவா் திருடியுள்ளாா்.

விசாரணையின் போது, அழைப்பு பதிவுகள், வாடிக்கையாளா் விண்ணப்ப படிவங்கள், வங்கி பரிவா்த்தனைகள் மற்றும் ஐபி பதிவுகளை பகுப்பாய்வு செய்து குற்றம் சாட்டப்பட்டவரை போலீசாா் அடையாளம் கண்டனா். ‘அவா் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

அதிகாரியின் கூற்றுப்படி, ராஜஸ்தானின் சிகாரில் இருந்து சைனி கைது செய்யப்பட்டாா், மேலும் மோசடி பரிவா்த்தனைகள் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளின் ஆதாரங்களைக் கொண்ட அவரது செலப்பேசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, திருடப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை சூதாட்டத்தில் இழந்ததாகவும், மீதமுள்ள தொகை கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் செலவிடப்பட்டதாகவும் அவா் போலீசாரிடம் தெரிவித்தாா். மோசடி செய்யப்பட்ட தொகையை கண்டுபிடித்து மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க