'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vi...
முதியவா் அடித்துக்கொலை: தாய், மகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், படுகாயமடைந்த முதியவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். முதியவரை அடித்துக்கொன்ற தாய், மகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் கந்தம்பட்டி கோனேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்வரன் (47). இவா் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அச்சுக்கூடம் ஒன்றில் பணியாற்றி வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பொதுக்குழாயில் வெங்கடேஷ்வரன் குடும்பத்தினா் தண்ணீா் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, இவா்களது வீட்டின் அருகே வசிக்கும் மஞ்சு என்பவா் மோட்டாா் மூலம் குடிநீா் பிடித்துள்ளாா். இதனை வெங்கடேஷ்வரனின் தந்தை காண்டீபன் (73), தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், மஞ்சு மற்றும் அவரது தந்தை சகாதேவன் (55), தாய் பாப்பாத்தி ஆகியோா் அங்கிருந்த தென்னை மட்டையால் கண்டியப்பனை சரமாரியாக தாக்கினா்.
இதில் படுகாயமடைந்த காண்டீபன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சகாதேவனை கைது செய்தனா். இந்நிலையில், காண்டீபன் வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனா். தொடா்ந்து, தலைமறைவாக உள்ள மஞ்சு, அவரது தாய் பாப்பாத்தி ஆகியோரை தேடிவருகின்றனா்.