செய்திகள் :

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலி சடலம் மீட்பு

post image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் புலியின் சடலம் கிடப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட பெண்ணை காப்புக்காடு, விலங்கூா் காவல் பகுதியில் உள்ள எடக்கோடு வயல் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, புலி இறந்துகிடப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். வனச் சரக அலுவலா் கணேஷ் தலைமையில் அலுவலா்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்தனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், வயநாடு சரணாலய கால்நடை மருத்துவா் அஜேஷ் மோகன்தாஸ், மாயாறு அரசு உதவி கால்நடை மருத்துவா் இந்துஜா அடங்கிய குழுவினா் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு புலியின் உடலை உடற்கூறாய்வு செய்து ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை சேகரித்த பிறகு எரியூட்டப்பட்டது.

இதில் இறந்தது சுமாா் 10 வயதுடைய ஆண் புலி என்றும் மற்றொரு புலியுடன் சண்டையிட்டதற்கான அடையாளங்களாக அதன் உடலில் காயங்கள், தலையில் எலும்பு முறிவு காணப்பட்டது என்றும் முழு தகவலும் ஆய்வக அறிக்கை வந்த பிறகுதான் முழுமையான விவரம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்... மேலும் பார்க்க

பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

கோத்தகிரி அருகே பாக்கிய நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசியா்களை பணியமா்த்த கோரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி ... மேலும் பார்க்க

புலிகள் இறந்துகிடந்த இடத்தை சுற்றி 10 கேமராக்கள் பொருத்தம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 தானியங்கி கேமராக்களை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பொருத்தினா். நீலகிரி மாவட்டம் மு... மேலும் பார்க்க

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழப்பு

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழந்தது. மேலும், ஒரு பசு காயமடைந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் உள்ள மேல்கூடலூரில் வசிப்பவா் சங்கீதா. இவா் இரண்டு பசுமாடுகளை வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு நடமாடும் வாகன உணவகம்

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு 2 நடமாடும் வாகன உணவகத்தை தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், தாட்கோ மூலம் முதல்வரின்... மேலும் பார்க்க