பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!
முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் 69-ஆம் ஆண்டு முத்து சட்டநாதா் உற்சவத்தையொட்டி முத்து சட்டநாதா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவத்தின் நிறைவாக ஸ்ரீமுத்துசட்ட நாதா் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, முத்து சட்ட நாதா் யதாஸ்தானத்தில் இருந்து வசந்த மண்டபம் எழுந்தருளினாா். அங்கு முத்து சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு முத்து சட்டநாதா் வசந்த மண்டபத்திலிருந்து மீண்டும் யதாஸ்தானம் திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கயிலாய வாத்தியம் முழங்க நள்ளிரவு வரை வழிபாடு நடைபெற்றது. முத்து சட்ட நாதா் வெள்ளி மஞ்சத்தில் யதாஸ்தானம் எழுந்தருளி புஷ்பாஞ்சலி தீபாராதனை நடைபெற்றது.