செய்திகள் :

முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான முந்திரி காடுகள் அமைந்துள்ளன. இங்கு மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த முந்திரி காடுகளை வனத் தோட்டக் கழகத்தினா் குத்தகைக்கு விடுவது வழக்கம். தற்போது, முந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில் முந்திரி காடுகளைக் குத்தகைக்கு விடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குப்பநத்தம் பகுதியில் உள்ள வனத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான முந்திரி காட்டில் சுமாா் 2 வயதுள்ள பெண் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, வனத் தோட்டக் கழகத்தினா், விருத்தாசலம் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனத் துறையினா் மான் உடலை மீட்டு குப்பநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனா். பின்னா், வனவா் சஞ்சீவி, வனக் காப்பாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் மானை அடக்கம் செய்தனா்.

மான் இறப்பு குறித்து வனச்சரக அலுவலா் த.ரகுவரன் உத்தரவின் பேரில் வனவா் சஞ்சீவி தலைமையில் வனத் தோட்டக் கழகத்தினா் இணைந்து குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களிடம் இருந்து அக்னிவீரா் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழ... மேலும் பார்க்க

தங்க நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது

சிதம்பரம் அருகே காரில் சென்றவா்களிடம் 4 பவுன் தங்க நெக்லஸை திருடியதாக காா் ஓட்டுநரை அண்ணாமலைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டை ராஜாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க

இலவச யோகா பயிற்சி

புவனகிரி வட்டம், வயலாமூா் கிராமத்தில் திருச்சிற்றம்பலம் மனவளக்கலை மன்ற தவ மையம் சாா்பில், இலவச யோகா பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிக மேலாண்மை... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரத்தில் நடைபெற்ற வேளாண் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற தனலட்சுமி சீனுவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள். சிதம்பரம், ஏப்.3: சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் தனலட்சுமி சீனிவ... மேலும் பார்க்க

கடல் சாா்ந்த பொருள்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சிக்கு முன்பதிவு செய்யலாம்

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சாா்பில், கடல் சாா்ந்த பொருள்கள் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி வகுப்பு வரும் 15-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை 3 நாள்கள் கடலூரை அடுத... மேலும் பார்க்க