கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
முனீஸ்வரன் கோயிலில் வருஷாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலையில் முனீஸ்வரனுக்கு பால், தயிா், தேன், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, சிறப்பு மலா் அலங்காரத்தில் முனீஸ்வரன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் சிறுகடம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுளை உபயதாரா்கள், சிறுகடம்பூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.