`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தற்கொலை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையத்தில் முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (80). முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா். சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், வியாழக்கிழமை தனது ஓட்டு வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனா். அப்போது அங்கு வந்த கோவிந்தசாமியின் முதன் மனைவி செளந்தலாவின் மகன் ராஜராஜன், தனது தந்தை சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, சடலத்தை கொடுக்க மறுத்தனா். பின்னா் காவல் துறையினா் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.