ரோபோ சங்கர் மறைவு: `இளம் வயதில் உடல் பாதிக்க இதுதான் காரணம்' - நடிகர் இளவரசு
முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள்: பணியாளா் கல்லூரி புதிய தலைவா் பொறுப்பேற்பு
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் முப்படைகளின் பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியின் (ஈநநஇ) புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.
குன்னூா் வெலிங்டனில் உள்ள முப்படைகளின் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பாதுகாப்புப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு முப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சா்வதேச அளவில் புகழ்பெற்ற பாதுகாப்பு கல்லூரியின் தலைவராக பதவி வகித்து வந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸுன் பணிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.