செய்திகள் :

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

post image

மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி,

மும்பையில் நள்ளிரவு தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது. இதனிடையே, மும்பை, தாணே மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மணிக்கு 30 முதல் 40 கி..மீ வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் அங்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோகலே பாலம் வழியாகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று காலை முதல் புணேவில் கனமழை பெய்து வருகின்றது.

மேலும் செப். 16ல் கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரம் மற்றும் மராத்தாவாடாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, திங்கள்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மும்பையின் வடலா பகுதியில் மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, மேலும் அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு மற்றொரு மோனோ ரயிலுக்கு மாற்றப்பட்டதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

The India Meteorological Department (IMD) has issued a red alert for Mumbai after overnight heavy rainfall caused severe waterlogging in several parts of the city.

இதையும் படிக்க:கோவை தண்டவாளத்தில் குழந்தை பிணம்: நரபலி சந்தேகத்தில் போலீஸார் விசாரணை!

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார். நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை ... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சி... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: சில விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொட... மேலும் பார்க்க

வருமான வரி கணக்கு தாக்கல்: கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) நிறைவடைகிறது.அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க