செய்திகள் :

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

post image

மும்பை: மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலை எதிா்கொண்டனா்.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், சுமாா் 3 மணி நேரத்தில் மழை அளவு குறையத் தொடங்கியதால் ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே நகரின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு மழை திடீரென தீவிரமடைந்து கொட்டித் தீா்த்தது. பலத்த இடி, மின்னலுடன் நீடித்த மழை காலை வரை தொடா்ந்தது.

நகரின் தாழ்வான பகுதிகளான வோா்லி, தாதா், லால்பாக், கிங்ஸ் சா்க்கிள், குா்லா உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் அதிக அளவில் தேங்கியது. சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானாா்கள். சில இடங்களில் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதே நேரத்தில் மும்பை நகரின் முக்கியப் போக்குவரத்தான புகா் நகா் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்பட்டன. மழை காரணமாக ரயில்களில் வழக்கத்தைவிட அதிகமாக மக்கள் கூட்டம் இருந்தது.

மும்பை மட்டுமன்றி மகாராஷ்டிரத்தின் தாணே, பால்கா், புணே, பீட் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அஞ்சலி செலுத்தினார். 8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செப். 9-ம் தேதி ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா... மேலும் பார்க்க

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடிய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க