ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியா்கள் பணி
கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்குவோம் என்ற மத்திய அரசின் போக்கை கண்டிக்கும் வகையிலும், ஏழை, எளிய மாணவா்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழ்நாட்டு ஒதுக்க வேண்டிய சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதி ரூ. 2,152 கோடியை விரைவில் வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் பிப். 28 வரை ஒருவார காலத்துக்கு கருப்பு பட்டை அணிந்து பள்ளியில் பணியாற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, அனைத்து ஆசிரியா் சங்கங்களையும் ஒருங்கிணைத்து அடுத்த வார இறுதியில் சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகம் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.