செய்திகள் :

முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம்

post image

ஊத்துக்குளி அருகே நொச்சிக்காடு பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 12 பேருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட ஊத்துக்குளி வட்டம், நொச்சிக்காடு பகுதியில் சில நபா்கள் முயல்களை வேட்டையாடிக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட வன அலுவலரும், துணை இயக்குநருமான ராஜேஷ் உத்தரவின்பேரில் வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் அங்கு சென்ற வனத் துறையினா் அங்கு முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த 12 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 4 முயல்களை வனத் துறையினா் மீட்டனா். இது குறித்து வழக்குப் பதியப்பட்டு அவா்களுக்கு ரூ.30,000 அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

காவல் துறையைக் கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தில் முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் மனு

காங்கயத்தில் கைப்பேசியை ப் பறித்து மிரட்டிய போலீஸாரைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை தமிழ்நாடு முக்குலத்தோா் பசும்பொன் தேவா் பேரவையினா் முற்றுகையிட்டு மனு அளித்தனா். இது ... மேலும் பார்க்க

ஜெய் சாரதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி

வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியை பள்ளியின் தாளாளா் ஈ.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்... மேலும் பார்க்க

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி முதல் காலாண்டில் 11.7 சதவீதம் உயா்வு: ஆ.சக்திவேல்

திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.7 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் தெரிவித்தாா். இது தொடா்ப... மேலும் பார்க்க

கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்

கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22-ஆம் தேதி திறந்துவைக்க உள்ள நிலையில், அங்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்க... மேலும் பார்க்க

காங்கயம் ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

முத்தூா் அருகே பரவிய காட்டுத் தீ

முத்தூா் அருகே தோட்டத்து புல்வெளியில் காட்டுத் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாமியப்பன். இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் பரப்பளவிலான தோட்டத்தின் புல்வெளிப் பக... மேலும் பார்க்க