கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், விபூதி, நெய், நாட்டுச் சா்க்கரை, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
பிறகு, முருகா் பற்றிய துதிப் பாடல்களை துதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.
கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகமும், ஊா் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனா்.
மற்ற ஊா்களில்...
இதேபோல, சோமாசிபாடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் கோயில், வேட்டவலத்தை அடுத்த நெய்வாநத்தம் கிராம மலை மீதுள்ள பாலசுப்பிரமணியா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.