செய்திகள் :

முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப்புக்கூட்டல் பயிற்சி

post image
மதிப்புக்கூட்டல் என்பது விவசாயத்தின் ஓர் அம்சமாக இருந்துவருகிறது. காரணம், மதிப்புக்கூட்டினால் அந்தப் பொருளின் வாழ்நாள் அதிகம், கூடுதல் விலைக்கு விற்கலாம், விளைபொருள்களின் சேதத்தைக் குறைக்கலாம் எனப் பல நன்மைகள் உண்டு.

அதிலும் உலக அளவில் 'சூப்பர் ஃபுட்' என்றழைக்கப்படும் முருங்கையில் பலவிதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. முருங்கை சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்.

முருங்கை

அந்த வகையில் பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து 2025, பிப்ரவரி 1-ம் தேதி 'லாபம் கொடுக்கும் முருங்கை சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்' என்ற நேரடி பயிற்சியை நடத்த இருக்கிறது.

இந்தப் பயிற்சியில் முருங்கை மதிப்புக்கூட்டலுக்கான கருவிகள், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் விதம், முருங்கை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பல விஷயங்களைப் பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் முருங்கை மதிப்புக்கூட்டலில் ஈடுபட்டிருக்கும் தொழில்முனைவோர் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், மதிப்புக்கூட்டலில் ஈடுபட விரும்புவோர் எனப் பலரும் கலந்து கொள்ளலாம்.

அறிவிப்பு

மதிப்புகூட்டலுக்கு வழிகாட்டும் விதமாக 1 லட்சம் ரூபாய் முதலீட்டிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதற்கான வழிகாட்டல்கள் இந்த மதிப்புக்கூட்டல் பயிற்சி வழியாக கிடைக்கும்.

முருங்கை பவுடர், கேப்சூல், தேநீர், சூப் மிக்ஸ் போன்றவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து பயிற்சி அளிப்பதோடு அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வழிகாட்டலும் கிடைக்கும்.

நாள் : 01-02-2025 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை .

இடம்: இடம்: தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (EDII), தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம்.

கூகுள் மேப் லிங்க்:

https://maps.app.goo.gl/sqPi38tLPubpxpcA7

அறிவிப்பு

பயிற்சி கட்டணம்: 1,200 ரூபாய்

(பயிற்சியில் நோட் பேட், பேனா, தேனீர் , சான்றிதழ், மதிய உணவு போன்றவை வழங்கப்படும்).

சிறப்பு அம்சங்கள்:

முருங்கையில் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள்.

இயற்கை முறையில் முருங்கை சாகுபடி செய்யும் முறைகள், ரகங்கள்  தேர்வு, பராமரிப்பு, நோய் வேளாண்மை.

முருங்கை இலை அறுவடை மற்றும் காய வைக்கும் முறைகள்.

முருங்கை இலையை பவுடர் ஆக்குதல், கேப்சூல் தயாரித்தல், முருங்கை தேநீர் தயாரிக்கும் முறைகள், குறித்தான நேரடி செயல் விளக்கம்.

முருங்கை சூப் மிக்ஸ், ரைஸ் மிக்ஸ், முருங்கை லட்டு ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள்.

முருங்கை ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்யும் முறைகள் .

அறிவிப்பு

பயிற்சி கட்டணம் ரூபாய் 1200 /-செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் . 

கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு: 99400 22128

பொங்கல்: 'எங்க ஊரு கரும்பு ருசியே தனி ரகம் தான்!' - ரகசியம் சொல்லும் விருதுநகர் விவசாயிகள்

பொங்கல் பண்டிகை என்றதும் பொங்கல் சுவையோடு சேர்த்து கரும்பின் தித்திப்பும் நாக்கில் சட்டென வந்து போகும். அதுவும் சில ஊர்களில் விளையும் கரும்புகளின் சுவை தனி ரகம். அப்படியான ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம... மேலும் பார்க்க

வண்ணவண்ண பானைகள்; கொத்துக்கொத்தாய் மஞ்சள், கரும்பு... ஈரோட்டில் களைகட்டிய பொங்கல் விற்பனை! - Album

பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்கள்பொங்கலுக்கு தேவையான பொருட்... மேலும் பார்க்க

`முல்லைப்பெரியாறு அணை உரிமைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!' - தமிழக விவசாயிகள் முடிவு

முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்திருப்பதாகவும் அதனால் நீர்மட்டத்தை 120 அடிக்கும் குறைவாக்க வேண்டும் எனக் கோரி கேரளாவைச் சேர்ந்த மேத்யூ நெடும்பாரா என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது ப... மேலும் பார்க்க

`இரண்டு ரூபாய் தினக்கூலி டு 9 ஏக்கர் விவசாயி’ - `பத்மஸ்ரீ' அஸ்ஸாம் விவசாயி சாதித்த கதை

அனைவருக்கும் சாப்பாடு போடும் விவசாயம், மக்களின் விருப்பமான தொழிலாக இல்லாமல் இருக்கிறது. அஸ்ஸாமில் ஒரு கூலித்தொழிலாளி விவசாயத்தை ஆர்வத்துடன் செய்து அதில் சாதித்து இருக்கிறார். அஸ்ஸாமில் உள்ள சிராக் மாவ... மேலும் பார்க்க

"வெங்காயத்திற்கு நல்ல விலை அல்லது திருமணம் செய்ய எனக்குப் பெண்" - மகா. முதல்வரிடம் விவசாயி கோரிக்கை

நாட்டில் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தொழில்துறை மட்டுமல்லாது விவசாயத்திலும் மகாராஷ்டிரா சிறந்து விளங்குகிறது. காய்கறிகள், பழங்கள் மகாராஷ்டிராவில் அத... மேலும் பார்க்க

2024 Erode Rewind: கோட்டை பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் டு குதிரைச் சந்தை! | Photo Album

ஈரோட்டுக்கு அரசு முறை பயணமாக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாஈரோடு கோட்டை பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா: ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு... மேலும் பார்க்க