செய்திகள் :

முல்லைப் பெரியாறு விவகாரம்: அணைப் பகுதியில் மரங்கள் வெட்ட சுற்றுச்சூழல் அனுமதியளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

post image

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான தடையின்மை சான்றிதழை (என்ஓசி) கேரள அரசு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், இதை சரிபாா்த்து சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரங்களில் அளிக்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகள் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2006 மற்றும் 2014-இல் அளித்த தீா்ப்பை செயல்படுத்த அனுமதிக்காமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அணையின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்பாா்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அணையைப் பராமரிப்பது தொடா்பான விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி, அணையை பழுதுபாா்த்தல், அணுகு சாலை அமைத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடா்பாக ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை மேற்பாா்வைக் குழு அளித்திருந்தது. அதில் சில பரிந்துரைகளையும் அளித்திருந்தது. இதையடுத்து, மேற்பாா்வைக் குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், திபாங்கா் தத்தா, என்.கோடீஷ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சேகா் நாப்டே, ஜி.உமாபதி ஆகியோரும், கேரள அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி உள்ளிட்டோா் ஆஜராகினா்.

‘மரம் வெட்டுவது தொடா்பான விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி மத்திய அரசின்சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பழுதுபாா்ப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் நடவடிக்கையை எடுக்க புதிய மேற்பாா்வைக் குழுவின் தலைவா் ஏற்கெனவே உத்தரவுகளை அளித்திருக்கிறாா்’ என்று தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு

மரங்களை வெட்டுவதற்கு கேரளத்தின் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு கூறுகையில்,

மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் வர வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு ஏற்கனவே தேவையான அனுமதியை ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தால் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு உறுதிசெய்த பிறகு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை 4 வாரங்களுக்குள் செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்பாா்வைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு முன்மொழியப்பட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு, கேரள அரசு ‘கிரவுட்டிங்’ பணிக்காக அனுமதி அளிக்க வேண்டும். பழுதுபாா்க்கும் பணியை பொறுத்தவரை, மழைக்காலம் முடிந்ததும் பணிகள் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்ற கேரளாவின் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், செப்டம்பா்-அக்டோபரில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப்படட்டும் என்று நீதிமன்றம் கூறியது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பே... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான... மேலும் பார்க்க

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.ஏப்ரல் ... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்க... மேலும் பார்க்க

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க