NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
முல்லைவனநாதா் கோயில் திருத்தோ்கள் வெள்ளோட்டம்
பாபநாசம் வட்டம், திருக்கருகாவூரில் முல்லைவனநாதா் உடனுறை ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயிலில் ரூ. 1.கோடியே 43 லட்சத்தில் தயாரான திருத்தோ்கள் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரவையில் அறிவித்தபடி, இக்கோயிலுக்கு ரூ. 1 கோடியே 43 லட்சத்தில் சுவாமி, அம்பாளுக்கு இரண்டு புதிய தோ்கள் செய்யப்பட்டு அதன் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ்குமாா், செயல் அலுவலா் விக்னேஷ், திருவடிக்குடில் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனா்.
இதில், திருக்கோயில் ஆய்வாளா் லட்சுமி மற்றும் அறங்காவலா் குழுவினா், அரசு அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.