Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
குறிச்சி, முள்ளங்குடி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
கும்பகோணம் மின்கோட்டம், முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 15) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் கோட்ட வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் குறிச்சி, கீழக்காட்டூா், காகிதபட்டரை, பந்தநல்லூா், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனகுடி, கயலூா், திருக்கோடிக்காவல், குணதலபாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கூறியுள்ளாா்.