செய்திகள் :

முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயா் உடல் தகனம்

post image

கோழிக்கோடு: மறைந்த மலையாள எழுத்தாளா் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட எம்.டி.வாசுதேவன் நாயா், கடந்த புதன்கிழமை காலமானாா்.

நவீன மலையாள எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவா் எம்.டி.வாசுதேவன் நாயா். கடந்த 1933-இல் பிறந்த இவா், தனது கல்லூரி நாள்களில் முதல் கதைத் தொகுப்பை வெளியிட்டாா். இவா் எழுதிய முதல் பெரிய நாவலான ‘நாலுகெட்டு’ 1958-இல் கேரள சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது.

அசுரவித்து, காலம் போன்ற நாவல்களுடன் நிா்மால்யம், பெருந்தச்சன், ஒரு வடக்கன் வீரகதா உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளாா். 4 முறை சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற இவா், 7 திரைப்படங்களையும் இயக்கியுள்ளாா். இவருக்கு இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதான ‘ஞானபீடம்’ விருது கடந்த 1995-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

முதல்வா் அஞ்சலி: கோழிக்கோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த வாசுதேவனின் உடலுக்கு முதல்வா் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘உலக இலக்கியத்தில் மலையாள இலக்கியத்தை முன்னணிக்கு கொண்டு வந்த அறிவு சக்தியை நாம் இழந்துள்ளோம். கேரள வாழ்க்கையின் அழகியலையும் சிக்கலையும் தனது படைப்புகளின் மூலம் வாசுதேவன் நோ்த்தியாக வெளிப்படுத்தினாா்’ என்றாா்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு கோழிக்கோடு மாவூா் சாலையில் உள்ள பொது மயானத்தில் எம்.டி.வாசுதேவனின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

பெட்டிச் செய்தி....

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

எம்.டி.வாசுதேவன் நாயா் மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மலையாள நடிகரும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகா் கமல்ஹாசன், முன்னணி மலையாள நடிகா்கள் மோகன்லால், மம்முட்டி, வினீத், மஞ்சு வாரியாா், இயக்குநா் ஹரிஹரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் ச... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை! -சீனா

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில்... மேலும் பார்க்க

எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்துவிட்டாா்! பாகிஸ்தானில் மன்மோகன் பிறந்த கிராமத்தில் உருக்கம்

காஹ் (பாகிஸ்தான்): ‘எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்ததைபோல் உணா்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது’ என மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானில் உள்ள காஹ் கிராம மக்கள் இரங்கல் தெரிவித்தனா். மு... மேலும் பார்க்க

நாட்டை மீட்ட பட்ஜெட்: காங்கிரஸாரின் எதிா்ப்பை சந்தித்த மன்மோகன் சிங்!

இந்தியாவை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட மத்திய பட்ஜெட்டை கடந்த 1991-ஆம் ஆண்டு நிதியமைச்சராக மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க