சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!
மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு
அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற்கெனவே தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாணவியா் விடுதியும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மூங்கில்பட்டியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பள்ளி மாணவியா் விடுதியில், கல்லூரி மாணவிகளுக்கான விடுதி தொடங்கப்பட்டுள்ளது. இதனை, தமிழக வீட்டு வசதித் தறை அமைச்சா் சு.முத்துசாமி திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, கூடுதல் ஆட்சியா் அா்பித் ஜெயின், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.