அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் மூச்சுத்திணறல் காரணமாக தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கண்டமங்கலம் வாய்க்கால்மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (37). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஜனாா்த்தனன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.