புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு
அருப்புக்கோட்டையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், எம். ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி மனைவி புஷ்பம் (77). இவா், அருப்புக்கோட்டையில் உள்ள சகோதரி பூங்கொடி வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா், சொந்த ஊருக்கு செல்வதற்காக புஷ்பம் பேருந்தில் திரும்பினாா். அப்போது அவரிடம், இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்தனா்.
அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே சென்ற போது, புஷ்பம் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.