இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!
மூதாட்டியிடம் நகை பறிப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்கரை கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் அம்பலம் மனைவி முத்துவன்னி (80). இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் முன்பு நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் முத்துவன்னி காதில் அணிந்திருந்த ஆறரை பவுன் மதிப்பிலான தங்க தண்டட்டிகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.