செய்திகள் :

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனிம வளங்கள் கொள்ளை போகின்றன: அண்ணாமலை

post image

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகான் அவர்களது மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல்(மார்ச் 16) அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉர... மேலும் பார்க்க

வில்வித்தை பயிற்சியாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ் ஆப் (Bot) மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வா... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64. தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தூத்துக்குடி மாவட்டம்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ்!

உடல்நலக் குறைவுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும் பார்க்க