செய்திகள் :

சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!

post image

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ் ஆப் (Bot) மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ்ஆப் சாட்பாட் மூலம் வாட்ஸ்ஆப் ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறும் சேவை தற்காலிகமாக வேலை செய்யவில்லை.

எனவே, அனைத்து பயணிகளும் சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, மொபைல் க்யூஆர், சிங்காரா சென்னை அட்டை, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற ஆன்லைன் முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இண்டியன்வெல்ஸ்: அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி!

மேலும் தகவல் வரும் வரை பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுண்டரிலும் டிக்கெட்டுகளைப் பெறலாம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது. மேலும் தகவல்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல்(மார்ச் 16) அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉர... மேலும் பார்க்க

வில்வித்தை பயிற்சியாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனிம வளங்கள் கொள்ளை போகின்றன: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனுமதியி... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64. தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் தூத்துக்குடி மாவட்டம்... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ்!

உடல்நலக் குறைவுக் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும் பார்க்க