உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
மூதாட்டியிடம் பணப்பையைப் பறித்தவா் கைது
பூமாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், சூலூா் அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் வேலம்மாள் (77). இவா், கோவை பூமாா்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறாா்.
பூமாா்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் வேலம்மாள் செவ்வாய்க்கிழமை நின்றிருந்தபோது, அங்கு நின்றிருந்த மா்ம நபா் வேலம்மாளின் கைப்பையைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாா். கைப்பையில் ரூ.5,500 பணம் வைத்திருந்தாா்.
இதையடுத்து, மூதாட்டி சப்தம் எழுப்பவே அருகிலிருந்தவா்கள் அவரைப் பிடித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், மூதாட்டியிடம் பணப்பையைப் பறித்துச் செல்ல முயன்றவா் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த பஞ்சவன் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.