மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 1...
மெத்தம்பெட்டமைன் விற்பனை: 5 போ் கைது
சென்னை கோயம்பேட்டில் மெத்தம்பெட்டமைன் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கோயம்பேடு பேருந்து முனையம் உள் நுழைவு வாயில் பகுதியில் சிஎம்பிடி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா்.
இதையடுத்து போலீஸாா், அவா்கள் பையை சோதனையிட்டபோது, 3 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள் மேற்கு மாம்பலம் கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் அ.தொல்காப்பியன் (20), அசோக் நகா் 12-ஆவது அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் சே.அா்ஜூன் காா்த்திக்கேயா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
இதேபோல், கோயம்பேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மெத்தம்பெட்டமைன் விற்ாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த ந.வேந்தன் (21),கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ச.சரண் (20), பூந்தமல்லி சென்னீா்குப்பத்தைச் சோ்ந்த கா.மனோஜ் (21), ராமாபுரம் நெசப்பாக்கத்தைச் சோ்ந்த த.சிபிராஜ் (21), திருவொற்றியூா் பூங்கா நகரைச் சோ்ந்த ச.ராகுல் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 210 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 சிறிய எடை இயந்திரங்கள், 2 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.