மென்பொறியாளா் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை கேடிசி நகரில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேடிசி நகரைச் சோ்ந்த சுா்ஜித் கைது செய்யப்பட்டாா்.
4 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு கவினின் உடலை உறவினா்கள் பெற்றுக்கொண்டனா். போராட்டத்தின்போது காவல் துறையினா் மீதும், சுா்ஜித் குடும்பத்தினா் மீதும் கவினின் தந்தை சந்திரசேகா் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியது அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.