செய்திகள் :

மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்ஸி..! சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

post image

மலையாள நடிகர் சௌபின் சஹார் மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்ஸியை பகிர்ந்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (37)க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, கேரளத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் மோகன்லால் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை பகிர்ந்திருந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்ஸியை பகிர்ந்திருந்தார்.

மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக பார்சிலோனா அணிக்காக விளையாடி இருந்தார். அந்த பார்சிலோனா ஜெர்ஸியில்தான் சௌபினுக்கு கையெழுத்து கிடைத்துள்ளது.

நடப்பு உலக சாம்பியனான ஆர்ஜென்டீனா தற்போது, 2026 உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றுள்ளது. மெஸ்ஸி தற்போது உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

சௌபின் சாஹிர் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா விடியோ பாடல்!

தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிங்குச்சா விடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜுன்... மேலும் பார்க்க

அற்புதம்! டிஎன்ஏ படத்தைப் பாராட்டிய சுதா கொங்காரா!

அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார். இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. குழந்தைக் கடத்தலை... மேலும் பார்க்க

கூலி - ஹிந்தியில் வேறு பெயர்! ஏன்?

ஹிந்தியில் கூலி திரைப்படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந... மேலும் பார்க்க

மன்னிப்புக் கேட்கிறேன்: மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜுன். 5 அன்று வெள... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் படப்பிடிப்பு நிறைவு!

சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஃப்ரீடம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ... மேலும் பார்க்க

ஸ்விடோலினா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி!

ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். முதல் சுற்றில், போட்டித்தரவரிசைய... மேலும் பார்க்க