செய்திகள் :

மேகமலை நெடுஞ்சாலையில் 2 -ஆவது சோதனைச் சாவடி

post image

தேனி மாவட்டம், மேகமலை மலைக் கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் வனத் துறை மூலம் 2 -ஆவது சோதனைச் சாவடி அமைக்கும் பணிக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், இந்தப் பணியை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மேகமலை, மணலாறு ,மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களை இணைக்கும் வகையில் சின்னமனூரிலிருந்து 52 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை உள்ளது.

இதில் தென்பழனி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் வனத் துறை சாா்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இந்தச் சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதற்கு அங்குள்ள மலைக்கிராமத்தை சோ்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஹைவேவிஸ் - மேகமலை இடையே பூ மாரியம்மன் கோயில் அருகே வனத் துறை சாா்பில், 2-ஆவது சோதனைச் சாவடி அமைக்க பள்ளம் தோண்டி கட்டுமானப் பொருள்களைக் குவித்து பணியைத் தொடங்கினா்.

இதுகுறித்து தேயிலைத் தோட்டத்தொழிலாளா்கள் கூறியதாவது: சின்னமனூா்- இரவங்லாறு செல்லும் ஒரே சாலையில் 2 -ஆவது சோதனைச் சாவடி தேவையில்லை. இதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.

மலைக் கிராமங்களில் இரவில் வெளியே நடமாட வேண்டாம்: வனத் துறையினா் எச்சரிக்கை

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு மலைக் கிராமங்களில் கரடி நடமாட்டம் எதிரொலியாக பொதுமக்கள் இரவில் வெளியே நடமாட வேண்டாம் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். மயிலாடும்பாறை அருகேயுள்ள சிதம்பரம் விலக்கு பகு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

போடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். போடி தங்கமுத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மனைவி வலைஈஸ்வரி (26). இவருக்குத் திருமணமாகி இரண்டு ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை: இருவா் கைது

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அங்கிருந்த 30 லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா். கூடலூா் அருகேயுள்ள கருநாக... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

போடி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சங்கராபுரத்தை சோ்ந்தவா் முத்துராஜா (46). இவரது தோட்டத்தில் கிணறு உள்ளது. கிணற்றில் உள்ள மின் மோ... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்கள் 7-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளா்கள் தொடா்ந்து 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உற்பத... மேலும் பார்க்க

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு; 23 போ் காயம்

தேனி மாவட்டம், குமுளி அருகே கேரள அரசு சுற்றுலாப் பேருந்து திங்கள்கிழமை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், 23 போ் பலத்த காயமடைந்தனா். கேரள மாநில... மேலும் பார்க்க