நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல் - என்ன நடந்தது?
சீனாவின் மிகப்பெரிய உணவகங்களின் ஒன்றான ஹைடிலாவ் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானதை எடுத்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
ஷாங்காயில் உள்ள ஹைடிலாவ் கிளை உணவகத்தில் ஒரு நபர் மேசையின் மீது நின்று உணவு மீது சிறுநீர் கழிக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலானதைஅடுத்து, இந்த சம்பவத்திற்காக உணவகம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷாங்காய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த அன்று பெறப்பட்ட 4,100 ஆர்டர்களுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு முழு பணத்தை திருப்பி தருவதாகவும் இழப்பீடு வழங்குவதாகவும் உணவகம் கூறியுள்ளது.
ஹைடிலாவ் அதன் சேவை மற்றும் மெனுவிற்கு பிரபலமானது. இந்த உணவகம் சீனாவில் மட்டுமின்றி தனது கிளையை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விரிவுபடுத்தியுள்ளது.
Two boys have been detained by Shanghai police for allegedly urinating into a hotpot at an outlet of famous restaurant #Haidilao, police officers announced on Saturday.
— Shanghai Daily (@shanghaidaily) March 8, 2025
In the video, the man also laughed and said that the restaurant, Haidilao, China's hotpot chain, had launched a… pic.twitter.com/WeT0QSliDH