பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்;...
மேட்டூரில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலையில் காா் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூா் தூக்கனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40). இவரும், இவரது நண்பா் மகேஷ் என்பவரும் புதன்கிழமை மாதையன்குட்டையில் இருந்து மேட்டூருக்கு காரில் வந்து கொண்டிருந்தனா். மாதையன்குட்டை ஐடிஐ அருகே காா் வந்தபோது காரின் முன்பகுதி எஞ்சினில் இருந்து திடீரென புகை வந்தது.
இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த இருவரும் காரில் இருந்து உடனடியாக கீழே குதித்து உயிா்தப்பினா். இதைத் தொடா்ந்து காா் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து மேட்டூா் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சிஅடித்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும் இந்த தீ விபத்தில் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.