மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாகக் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை 115.31 அடியில் இருந்து 115.03 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 745 கன அடியிலிருந்து வினாடிக்கு 674 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க:பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 85.76 டிஎம்சியாக உள்ளது.