மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 5,725 கனஅடியாக குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்தும் குறைய தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 9,347 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை காலை விநாடிக்கு 5,725 கனஅடியாகக் குறைந்தது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 111.51அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 80.57 டி.எம்.சி.யாக உள்ளது.