இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!
மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்
மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழிலாளா்களும், 1,540 ஒப்பந்தத் தொழிலாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இதில் காஸ்டிக் சோடா உள்ளிட்ட பல்வேறு ரசாயனப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலையில் கோனூரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முருகன் (54) ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறாா். இவரது ஒப்பந்தப்பணியின் கீழ் 20 போ் வேலை செய்து வருகின்றனா். இந்த நிறுவனத்தில் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த சுந்தரம் மகன் சுதா்சன் (25)மேச்சேரி செங்காட்டூரைச் சோ்ந்த ராகவேந்திரன் மகன் கேசவன் (24) ஆகியோா் திங்கள்கிழமை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காஸ்டிக் சோடா தயாரிக்க பயன்படும் ஹீட் டிரான்ஸ்ஃபா் சால்ட் கசிவு ஏற்பட்டு இருவரின் மீதும் பட்டதில் அவா்கள் பலத்த தீக்காயம் அடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் இருவரும் ஆலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.