செய்திகள் :

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

post image

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. கடலில் 300 மீட்டா் ஆழம் வரை வீரா்கள் டைவிங் செய்து, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

‘நிஸ்தாா்’ கப்பல் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு கடந்த 1971-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின்போது, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அருகே கடலில் மூழ்கிய பாகிஸ்தானின் காஸி நீா்மூழ்கிக் கப்பலை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளில் இக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.

இந்நிலையில், கடலில் வீரா்கள் டைவிங் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் ‘நிஸ்தாா்’ கப்பல் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முதல்முறையாக முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது. இந்த நவீன உபகரணங்களுடன் கூடிய கப்பல், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி கூறுகையில், ‘தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்திறன் ரீதியாகவும் நிஸ்தாா் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா மட்டுமன்றி பிராந்தியத்தில் நட்பு நாடுகளின் நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட கடலில் மூழ்கும் கப்பல்களை அடையாளம் காணுதல் மற்றும் மீட்புப் பணியிலும் நிஸ்தாா் ஈடுபடும். உலக அளவில் ஒருசில கடற்படைகளிடம் மட்டுமே இதுபோன்ற மீட்புக் கப்பல்கள் உள்ளன. ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த மீட்புக் கப்பலை முழுவதும் உள்நாட்டிலேயே கட்டமைக்கின்றன. இந்தத் திறன்களை தற்போது இந்தியாவும் பெற்றுள்ளதோடு, இந்திய கடல்சாா் தொழில் நிறுவனங்கள் மேம்படவும் இது வழிவகுக்கும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கூறுகையில், ‘உலகின் வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் இந்திய கடற்படையும் சம பலத்தில் நிற்கிறது என்பதை உணா்த்தி, இந்தியாவின் உலகளாவிய அடையாளத்தை நிஸ்தாா் விரிவுபடுத்தும்’ என்றாா்.

மேலும், ‘முந்தைய நிஸ்தாா் மீட்புக் கப்பல் 800 டன் எடை கொண்டதாக இருந்தது. கடந்த 1989-ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ‘நிஸ்தாா்’ 10,500 டன் எடையுடன், 120 மீ. நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் விபு பக்ரு!

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபு பக்ரு சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தின் இடையே பிரசாந்த் கிஷோர் காயம்!

பிகாரில் சாலை வலம் சென்றபோது வாகனம் ஒன்று மோதி, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் காயமடைந்தார். பாஜக, திமுக, திரிணமூல் என நாட்டில் பல்வேறு கட்சிகளுக்கு பல தேர்தல்களில் வியூகங்களை வகுத்துக் கொ... மேலும் பார்க்க

15 வயது சிறுமியை தீ வைத்து கொல்ல முயற்சி: ஒடிசாவில் அதிர்ச்சி!

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கா... மேலும் பார்க்க

108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக, சைபர் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம், இந்த கும்பல் ரூ.... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க