Ajith: 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல' - நடிகர் அஜித்
மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 பேர் பலி
மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் உள்பட 3 பேரி பலியாகினர்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷ்யாம்நகர் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு தண்டவாளத்தை பெண் கடக்க முயன்றபோது அவரது கைகளில் இருந்து குழந்தை தவறி விழுந்தது. பிளாட்பாரத்தில் இருந்த பழ விற்பனையாளர், நிலைமையைக் கண்டு அவர்களை மீட்க விரைந்தார். ஆனால் அதற்கு கௌர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூவரும் அடிபட்டனர். உடனே உள்ளூர்வாசிகள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து பலத்த காயமடைந்தவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
இருப்பினும், லெவல் கிராசிங் ஆபரேட்டர் அவசர வாகனத்தை அனுமதிக்க கேட்களைத் திறக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முன்பு சிறிது தூரம் கையால் சுமந்து செல்ல வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கோபமடைந்த அப்பகுதி மக்கள் ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!
லெவல் கிராசிங் வாயில் நீண்ட நேரம் மூடுப்படுவதால் பாதசாரிகள் தண்டவாளங்களைக் கடக்க ஆபத்தான குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவதாகக் குற்றஞ்சாட்டினர். காவல்துறையினரும் அரசு ரயில்வே காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். சம்பவம் குறித்து விரைவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.