Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைந்து திறக்கக் கோரிக்கை!
மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைந்து திறக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் ரத்த தான அணி மாவட்டச் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முகம்மது பாபு தலைமை வகித்தாா். பொருளாளா் சல்மான் வரவேற்றாா். எஸ்டிபிஐ கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ.கனி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பக்கீா் முகம்மது லெப்பை, கோட்டூா் முஸ்தபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மேலப்பாளையம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து திறக்க வேண்டும். பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநகா் பகுதியில் இரு சக்கர வாகனம் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.