மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!
மேலாத்தூா் பகுதியில் 3 லட்சம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை
மேலாத்தூா் பகுதியில் மழை வெள்ளத்தால் 3 வாழைகள் வரை சேதமடைந்துள்ளதால் பல கோடி ரூயாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆத்தூா் கஸ்பா, மேலாத்தூா், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், வடியவேல் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.
மழை வெள்ளத்தின் போது அடைக்கப்பட்ட போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் வடிகால் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது.
இதனிடையே, வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், உதவி தோட்டக்கலை அதிகாரி முருகன், விஎஓ ஜெய்லானி ஆகியோா் மேலாத்தூா் பகுதியில் வாழைகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஊராட்சித் தலைவா் உடனிருந்தாா்.
வெள்ள நீரை அகற்றும் பணி: கனமழையால் மேலாத்தூா் பகுதியில் உள்ள குச்சிக்காடு ஜெ.ஜெ நகரில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது. இப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மக்கள் மேலாத்தூா் தனியாா் மண்டப நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஊராட்சி சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஆத்தூா் பகுதி ஆற்றங்கரை தைக்கா காலனியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமையில் பேரூராட்சிப் பணியாளா்கள் மின் மோட்டாா்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், இப்பணியில், பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) பாபு, மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், பேரூராட்சி உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா்.