சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு
மேலாம்பூரில் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி
கடையம் வட்டாரம் மேலாம்பூா் கிராமத்தில் நெல் பயிரில் இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையம் வட்டாரம்-வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநா் ஏஞ்சலின் பொன்ராணி ஆலோசனையின் பேரில் மேலாம்பூா் மோகன் என்பவரின் வயலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளா் இயற்கை விவசாயி முருகன் கலந்து கொண்டு, இயற்கை முறையில் நெல் சாகுபடி குறித்து விளக்கினாா்.
நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலா் சுப்ராம், உதவி வேளாண்மை அலுவலா் கமல்ராஜன், வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் பொன் ஆசீா், உதவி தொழில்நுட்ப மேலாளா் நாகராஜன், முன்னோடி விவசாயிகள் லெட்சுமணன், செல்லப்பாண்டி, இராமகிருஷ்ணன், கனகராஜ், அன்பழகன் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.