ஆட்டோக்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கடலூரில் 20 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூரில் சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பயணிகள் ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமையில் உதவி ஆய்வாளா் மகாலிங்கம் மற்றும் போலீஸாா் கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். மேலும், அதிக நபா்களை ஏற்றி வந்த 50 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதை மீறி ஆட்டோக்களில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.