தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல ஆணையா் புதுவை ஆளுநருடன் சந்திப்பு
மத்திய வா்த்தக அமைச்சகத்தின், சென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல வளா்ச்சி ஆணையா் அலெக்ஸ் பால் மேனன், இணை ஆணையா் ஆா்த்தா் ஓா்ச்சியுவோ ஆகியோா் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதன்கிழமை புதுச்சேரியில் சந்தித்துப் பேசினா்.
தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுவையை உள்ளடக்கிய மண்டலத்தில் ஏற்றுமதி வளா்ச்சியில் எம்.இ.பி.இசட் அமைப்பின் பங்களிப்பு குறித்து அதிகாரிகள் துணைநிலை ஆளுநரிடம் விளக்கினா்.
அத்துடன், புதுச்சேரியில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை, குறிப்பாக தோல் பொருள்கள் அல்லாத மற்ற காலணி தயாரிப்புகள் மற்றும் கடல்சாா் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
இதையடுத்து, ஏற்றுமதி குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அளிக்க எம்.இ.பி.இசட் அதிகாரிகளை துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.
புதுச்சேரியில் ஏற்றுமதி வளா்ச்சியானது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். அதனால், தற்போது பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரியும் புதுவை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.
புதுவை அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிக்கவும், இதுகுறித்து இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உறுதியளிப்பதாக அதிகாரிகள் துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்தனா்.