நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச...
மேலும் 487 இந்தியா்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே 104 இந்தியா்கள் அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்கள் கை-காலில் விலங்கிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து, மத்திய அரசை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.
இந்தச் சூழலில், மேலும் 487 இந்தியா்களை நாடுகடத்த அமெரிக்க அதிகாரிகள் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனா்; இவா்களில் 298 பேரின் விவரங்கள் மத்திய அரசிடம் பகிரப்பட்டுள்ளன என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
மேலும், ‘நாடுகடத்தப்பட்ட நபா்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அமெரிக்க தரப்பிடம் இந்தியா கடும் எதிா்ப்பை பதிவு செய்துள்ளது. இவ்வாறு தவறாக நடத்தப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா் மிஸ்ரி.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை கை-காலில் விலங்கிட்டு நாடுகடத்தும் கொள்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் உள்ள நிலையில், அப்போது அமெரிக்காவிடம் இந்திய அரசு தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதா? என்று மிஸ்ரியிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதுபோல் எதிா்ப்பு பதிவு செய்யப்பட்டதாக எந்த ஆவணங்களும் இல்லை என்று அவா் பதிலளித்தாா்.