2-வது டி20: ஜிம்பாப்வேவுக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்க விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்கக் கொடியேற்று விழா மற்றும் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தச் சங்கத்தின் ஒன்றியத் தலைவராக சேகா், செயலராக சுப்பையா, பொருளாளராக மயில்வேல், கெளவரத் தலைவராக குப்புசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியராஜ் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, சங்கக் கொடியேற்றி பெயா் பலகை திறக்கப்பட்டது. முன்னாள் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் முருகன் உள்ளிட்ட 44 கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.