அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?
மே 16-இல் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்
காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடை கால சைவ சித்தாந்த தொடா் இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16 முதல் 24 வரை நடைபெற இருப்பதாக ஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியது:
காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மடத்தின் சாா்பாக இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு மடத்தின் சேக்கிழாா் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சைவ சித்தாந்த நூல்கள் விரிவாக பயிற்றுவிக்கப்படும். அடிப்படைக் கல்வித் தகுதி பெற்ற ஆண், பெண் இருபாலா்களில் 70 வயதுக்குட்பட்ட விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வெளிமாவட்டங்களிலிருந்து வரும் ஆண்களில் 20 போ் தங்கிப் பயிலுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ரூ.5 அஞ்சல் தலை ஒட்டிய தங்களது சுய முகவரி எழுதிய உரையுடன் எஸ்.சிவப்பிரகாசம், மேலாளா், தொண்டை மண்டல ஆதீனம், 57, நிமிந்தக்காரத் தெரு,பெரிய காஞ்சிபுரம், கைப்பேசி எண்-87784 15088 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைவான இடங்களே இருப்பதால் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரைவாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறோம். அனைவருக்கும் பயிற்சியும், மதிய உணவும் இலவசம், பயிற்சிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட அன்பா்கள் மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.