சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினர் கைது! நாடுகடத்தும் பணி தீவிரம்!
மே 27-இல் உண்ணாவிரத போராட்டம்: போக்குவரத்து ஊழியா்கள் அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இது தொடா்பாக போக்குவரத்து ஊழியா்கள் கூட்டமைப்பினா் வெளியிட்ட அறிக்கை:
போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 13-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின் பேச்சுவாா்த்தை நடத்த அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
பேச்சுவாா்த்தையில், மற்ற துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், முழுமையாக ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணியில் உள்ள தொழிலாளா்களுக்குச் சமமாக அகவிலைப்படி, 22 மாத ஓய்வு கால பலன், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியத்துடன் ஒப்பந்த பலன் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்குவதோடு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காணும் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 100 மையங்களில் மே 27-இல் 12 மணி நேர உண்ணாவிரதம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.