பந்தலூர்: தொடர் கண்காணிப்பு... `அரிசி பிரியர்’ புல்லட்டை மயக்க ஊசி செலுத்தி பிடி...
மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழா
மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கினா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் பழைமையான தான்தோன்றியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான குண்டம் திருவிழா டிசம்பா் 11-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. டிசம்பா் 23-ஆம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 25-ஆம் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெற்றன.
இதையடுத்து, குண்டம் இறங்குதலுக்காக பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய 10 டன் விறகுகளைக்கொண்டு குண்டம் திறப்பு புதன்கிழமை இரவு தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. அம்மை அழைத்தல், குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றவுடன் தலைமை பூசாரி ராஜகோபால் குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
இவரைத் தொடா்ந்து மற்ற பூசாரிகளும், பக்தா்களும் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடனும், பூச்சட்டி ஏந்தியும் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கினா்.